பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (10+ 23)
Share
Advertisement
சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (நவ.,08) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை தஞ்சாவூர், சேலம், வேலூர், நாமக்கல், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், நாகப்பட்டினம்,
rain, school leave, college leave, கனமழை, பள்ளி, கல்லூரிகள், விடுமுறை

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (நவ.,08) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை தஞ்சாவூர், சேலம், வேலூர், நாமக்கல், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், நாகப்பட்டினம், சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


latest tamil news


தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதையடுத்து ராட்சத பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - madurai,இந்தியா
08-நவ-202119:54:30 IST Report Abuse
raja முதல்வர் இஸ்கூல தொறக்க சொல்லி வாய் மலர்ந்தருளினாரு, தீவாளி வருது, மழை வருது... என்ன சோதனையோ.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-நவ-202113:12:59 IST Report Abuse
mindum vasantham வீதிக்கு வந்த கூவம் நாறிய திராவிட ஆட்சி , குளங்கள் ஆக்கிரமிப்பு
Rate this:
Cancel
08-நவ-202112:50:26 IST Report Abuse
சம்பத் குமார் 1). பல வருடங்களுகளாக சுமார் 50 முதல் 75 வருடங்களாக இந்த பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டை பெரும்பாலும் திமுக மற்றும் காங்கிரஸ், அதிமுக ஆட்சி செய்து உள்ளது.2). எல்லா முதல்வர்கள் காலத்திலும் அதாவது கலைஞர் தொட்டு இன்றைய முதல்வர் ஸ்டாலின்( Ex சென்னை மேயர் 10 வருடங்கள்) அவர்கள் வரை இந்த பிரச்சினை உள்ளது.3). உண்மையாக சொல்லபோனால் சென்னை சுற்றியுள்ள பத்து மாவட்டங்கள் இயற்கையான டெல்டா பகுதிகள் ஆகும். 4). அதனால்தான் அந்த கால மன்னர்கள் எக்கச்சக்க குளம், குட்டை, ஏரிகள் அமைத்து இருந்தார்கள். மழை காலங்களில் வரும் வெள்ளத்திலிருந்து நீரை சேமித்து பிற்பாடு உபயோகித்து கொள்வதற்காக.5). அத்தனையும் பிளாட் போட்டு விற்றாகிவிட்டது. நல்ல வேளை தண்ணீர் தேவை இருந்ததால் மிச்சம் கொஞ்சம் ஏறி குளங்களை விட்டு வைத்தார்கள். 6). தேவையில்லாத ஜனத்தொகை பெருக்கம், தொழில் பெருக்கம். சொல்லப்போனால் சென்னை தவிர தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான இடமே இல்லை போன்று சூழ்நிலை பொய் பிம்பமாக கட்டமைக்க பட்டுள்ளது.7). தென் மாவட்டங்களில் துறைமுகம் மற்றும் படித்த இளைஞர்கள் இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது.8). இந்த குறையை போக்க இந்தியாவில் பல மாநிலங்கள் இரண்டு மூன்று தலைநகர் உடன் இயங்குகிறது. ஒரு தலைநகர் இரண்டு கோடி மக்களை மட்டும்தான் நிர்வகிக்க இயலும்.9). இதன் மூலம் ஒரே இடத்தில் மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் குவிப்பு குறைந்து நல்ல கட்டுமானங்கள் உள்ள ஆரோக்கியமான நகரங்கள் உருவாகும்.10). தமிழக அரசாங்கம் வரும் காலத்தை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய கூடுதல் தலைநகரங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழகம் சீரான வளர்ச்சி பெறும்.11). இதன் மூலம் சென்னை நெரிசல் குறைக்கப்படும். மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இடம் பெயர்ந்து தமிழம் புத்துணர்வு பெறும்.12). சொல்லப்போனால் சென்னையை விட்டால் வேறு வழியில்லை என்பதால் சென்னை மக்கள் மற்றும் தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது. நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X