கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மனைவி இறப்பு; கணவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு, 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் அதுல் பாரி. இவரது மனைவி பர்வீன் பேகம், 33; சுயதொழில் செய்தார். இவர்கள், 2017 நவம்பரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் சாலையில் 'பைக்'கில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, அதுல் பாரி 'பைக்' மீது


சென்னை : விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு, 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news




சென்னையைச் சேர்ந்தவர் அதுல் பாரி. இவரது மனைவி பர்வீன் பேகம், 33; சுயதொழில் செய்தார். இவர்கள், 2017 நவம்பரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் சாலையில் 'பைக்'கில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, அதுல் பாரி 'பைக்' மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

பர்வீன் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மனைவி இறப்புக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அதுல் பாரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.சுரேஷ் முன் நடந்தது.நீதிபதி உத்தரவுமனுதாரர் மனைவி இறப்புக்கு லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது விசாரணையில் தெளிவாகிறது.


latest tamil news




எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 18.43 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், லாரி உரிமையாளர் மற்றும் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
08-நவ-202116:08:04 IST Report Abuse
DVRR பரவாயில்லையே 4 வருடத்தில் தீர்ப்பா பரவாயில்லையே அதி வேகமாக வந்ததாக இருக்கின்றது. இப்போ இது செஷன்ஸ் கோர்ட்டுக்கு செல்லும். பிறகு ஹை கோர்ட்டுக்கு செல்லும் பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் இது தானே நடை முறை???ஆமா 50 லட்சம் மனைவி கொல்லப்பட்டதற்கு யாரு தலாக் தலாக் தலாக் கேசு கேட்குது????விபத்தில் மனைவி மட்டும் இறந்தார் இவர் பிழைத்துவிட்டார்?? அப்போ இருவருக்கும் சேர்த்தது தானே இழப்பீடு வழங்க வேண்டும். அந்த மொத்த பணத்தையும் கணவருக்கே கொடுக்கவேண்டியது தான்???என்ன கணக்கு ரூ 50 லட்சம் அதற்கு ரூ 18.43 லட்சம் கொடுக்கச்சொல்லி தீர்வு???அவர்கள் இழப்பா??சுயதொழில் என்றால் என்ன????அடுப்பு மூட்டுதல் உணவு செய்தல் உணவு பரிமாறுதலா???இல்லை???இழப்பீடு வருட வருமானம் எவ்வளவு இழப்பு அதை பொறுத்துதான் இருக்கும்???
Rate this:
Cancel
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
08-நவ-202111:49:37 IST Report Abuse
Vijayalakshmanan S இழப்பீடு தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும். லாரி உரிமையாளர் அல்ல
Rate this:
Cancel
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
08-நவ-202111:45:25 IST Report Abuse
Vijayalakshmanan S இழப்பீடு தொகை இன்சூரன்ஸ் கம்பெனி தர வேண்டும். லாரி உரிமையாளர் அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X