விபத்தில் மனைவி இறப்பு; கணவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மனைவி இறப்பு; கணவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை : விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு, 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் அதுல் பாரி. இவரது மனைவி பர்வீன் பேகம், 33; சுயதொழில் செய்தார். இவர்கள், 2017 நவம்பரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் சாலையில் 'பைக்'கில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, அதுல் பாரி 'பைக்' மீது


சென்னை : விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு, 18.43 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news




சென்னையைச் சேர்ந்தவர் அதுல் பாரி. இவரது மனைவி பர்வீன் பேகம், 33; சுயதொழில் செய்தார். இவர்கள், 2017 நவம்பரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் சாலையில் 'பைக்'கில் சென்ற போது, அதிவேகமாக வந்த லாரி, அதுல் பாரி 'பைக்' மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

பர்வீன் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மனைவி இறப்புக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அதுல் பாரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.சுரேஷ் முன் நடந்தது.நீதிபதி உத்தரவுமனுதாரர் மனைவி இறப்புக்கு லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது விசாரணையில் தெளிவாகிறது.


latest tamil news




எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 18.43 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், லாரி உரிமையாளர் மற்றும் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X