பொது செய்தி

தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு; ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை : ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து, ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.தொழில் நகரமான கோவைக்கு, பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முக்கிய போக்குவரத்தாக ரயில்வே துறை உள்ளது. இதைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தலும் அதிகம் நடக்கிறது.கடந்த சில


கோவை : ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து, ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.



latest tamil news


தொழில் நகரமான கோவைக்கு, பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முக்கிய போக்குவரத்தாக ரயில்வே துறை உள்ளது. இதைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தலும் அதிகம் நடக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், நைஜீரிய வாலிபர் ஒருவர், ரூ.1.25 கோடி போதைப் பொருள் கடத்திய போது கைது செய்யப்பட்டார். இதேபோல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா, பான்பராக் கடத்துவதும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரயில்வே போலீசார் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


latest tamil news


ரயில்வே போலீசார் கூறுகையில், 'இப்போது கஞ்சா கடத்தலும் அதிகரித்துள்ளது. ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகள், சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் நபர்களிடம், தீவிர சோதனை நடத்தப்படுகிறது' என்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
08-நவ-202116:10:42 IST Report Abuse
DVRR என்ன தவறு???முஸ்லிம்கள் பிறகு வேலை இல்லாமல் தவிப்பார்கள் என்று சிறிதளவாவது மடியல் அரசு முதல்வர் நினைத்துப்பார்க்கின்றாரா???இதை தாராளமயமாக்கவேண்டும்??சரியா மடியல் அரசே???
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
08-நவ-202111:25:02 IST Report Abuse
Sivagiri முக்கியமா. ... செக் பண்ண வேண்டும் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X