சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி செயல்பட்ட 58 'பார்'களுக்கு திடீர் 'சீல்'

Added : நவ 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி செயல்பட்ட, 58 'பார்'களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை தெற்கு மாவட்ட, டாஸ்மாக் நிர்வாகத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில், 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதில், 113 'பார்'கள் செயல்படுகின்றன. ஏப்., 24ம் தேதி கொரோனா பரவலை

பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி செயல்பட்ட, 58 'பார்'களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை தெற்கு மாவட்ட, டாஸ்மாக் நிர்வாகத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில், 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதில், 113 'பார்'கள் செயல்படுகின்றன. ஏப்., 24ம் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, 'பார்'கள் மூடப்பட்டன. அதன்பின், கடந்த, 1ம் தேதி திறக்கப்பட்டன.இதில், பல 'பார்'கள் உரிய அனுமதியின்றி, ஆளும்கட்சியினரின் செல்வாக்குள்ள நபர்கள் 'பார்'களை அனுமதியின்றி தைரியமாக திறந்தனர்.இந்த 'பார்'களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், டாஸ்மாக் கடைகள் அடைத்திருக்கும் நேரத்தில், கடை ஊழியகர்கள், 'பார்' ஊழியர்கள் இணைந்து, மது வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே, 'பார்'களில் அனைத்து சட்ட விதிமீறல்களும் அரங்கேறின. ஆட்சி மாறினாலும், டாஸ்மாக் 'பார்'களில், காட்சி மாறாதது குறித்து, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம், கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், அனுமதியின்றி செயல்பட்ட, 58 'பார்'களை மூடி 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X