பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் ஆர்ப்பரிக்கும் பஞ்சலிங்க அருவி: திருமூர்த்திமலைக்கு செல்ல தடை நீட்டிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
உடுமலை;பாதுகாப்பு காரணங்களுக்காக, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டுள்ளனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலையில், கடந்த சில நாட்களாக, பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், மலைத்தொடரில் உள்ள சிற்றாறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பஞ்சலிங்க அருவி, ஆர்ப்பரித்து

உடுமலை;பாதுகாப்பு காரணங்களுக்காக, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டுள்ளனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலையில், கடந்த சில நாட்களாக, பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், மலைத்தொடரில் உள்ள சிற்றாறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பஞ்சலிங்க அருவி, ஆர்ப்பரித்து கொட்டியது.நேற்றுமுன்தினம் மலை அடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து, பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில், மலைத்தொடரில், பருவமழை தீவிரமடைந்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தளி போலீசார், சாம்பல் மேடு பகுதியில், தற்காலிக செக்போஸ்ட் அமைத்து, திருமூர்த்திமலைக்கு செல்லும் வாகனங்களை, நேற்று திருப்பி அனுப்பினர். கோவில் பகுதியில், இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நேற்று பகலில், மழை இல்லாத நிலையில், சிற்றாறுகளில், அதிக நீர் வரத்து காரணமாக, பஞ்சலிங்க அருவியில், வழக்கத்தை விட கூடுதலாக நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணைக்கு, வினாடிக்கு, 979 கன அடி நீர் வரத்து இருந்தது. அணைப்பகுதியில், 7.2 மி.மீ., நல்லாறு பகுதியில், 12 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், பொதுப்பணித்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளான நேற்றும் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X