சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்: இளைஞரை தாக்கியவர்கள் கைது

Added : நவ 08, 2021
Share
Advertisement
உடுமலை எலையமுத்துாரை சேர்ந்தவர் முரளிதரன், 20; இவரது தங்கைக்கு, அதே பகுதியைச்சேர்ந்த, கதிரேசன், 21, அடிக்கடி மொபைல்போனில், தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார்.இது குறித்து கேட்ட போது, கதிரேசன் மற்றும் அவரது நண்பர் கருப்புசாமி, 22 இருவரும் சேர்ந்து, முரளிதரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முரளிதரன், இது குறித்து

உடுமலை எலையமுத்துாரை சேர்ந்தவர் முரளிதரன், 20; இவரது தங்கைக்கு, அதே பகுதியைச்சேர்ந்த, கதிரேசன், 21, அடிக்கடி மொபைல்போனில், தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார்.இது குறித்து கேட்ட போது, கதிரேசன் மற்றும் அவரது நண்பர் கருப்புசாமி, 22 இருவரும் சேர்ந்து, முரளிதரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முரளிதரன், இது குறித்து அளித்த புகாரின் பேரில், அமராவதிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கதிரேசன், கருப்புசாமியை கைது செய்தனர்.
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

உடுமலை சிவசக்தி காலனியைச்சேர்ந்தவர் ராஜரத்தினம், 50; குடியிருப்பு அருகே, ரோட்டில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், பெண்ணிடமிருந்து, 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பி விட்டார்.இது குறித்து, ராஜரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை போலீசார், சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில், விசாரணை நடத்தினர்.இதில், ராஜரத்தினத்திடமிருந்து நகையை பறித்துச்சென்ற, காந்திபுரம் பகுதியைச்சேர்ந்த, ராஜா, 37 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஆற்றில் விழுந்தவர் பலி

ஆனைமலை அடுத்த காளியப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தசாமி, 47. இவர், கடந்த, 5ம் தேதி நண்பர்களுடன் அங்குள்ள தரைமட்ட பாலம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தரைமட்ட பாலத்தில் இருந்து தவறி, ஆழியாறு ஆற்று நீரில் விழுந்தார். மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட அவரை, தீயணைப்புத்துறையினர் இரண்டு நாட்களாக தேடினர். இந்நிலையில், நேற்று ஆலாங்கடவு அருகே அவரது சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சூதாடிய நபர்கள் கைது
உடுமலை வாசவிநகர் முள்ளுக்காடு பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு ரோந்து சென்ற போலீசார், காசு வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த, 9 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 870 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X