சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நடப்பட்ட சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புங்கை, வாகை, சவுக்கு, சந்தனம், வேம்பு உட்பட ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 20 அடி உயரம் வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தி சென்றிருப்பது

திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நடப்பட்ட சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புங்கை, வாகை, சவுக்கு, சந்தனம், வேம்பு உட்பட ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 20 அடி உயரம் வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு கடத்தி சென்றிருப்பது நேற்று காலை தெரியவந்தது.தலைமையாசிரியர் ஸ்டெல்லா அளித்த புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். தீபாவளியையொட்டி, பள்ளி தொடர் விடுமுறையை சாதகமாக பயன்படுத்தி, மரம் வெட்டப்பட்டுள்ளது. மரத்தின் அடிபகுதியில் இருந்து, 10 அடி வரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 75வது பிறந்தநாளை முன்னிட்டு, 1999ம் ஆண்டு வனத்துறை சார்பில், இந்த மரம் நடப்பட்டது. 22 ஆண்டு பழமையான மரத்தை மர்ம நபர்கள் வெட்டியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X