சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சல்யூட்' பெண் இன்ஸ்பெக்டர்மருத்துவமனையில் அனுமதி

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பெண் இன்ஸ்பெக்டர் அதிக மாத்திரைகள் உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருநெல்வேலி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, 43. இவர் 2020 ஆக.,15ல் திருநெல்வேலி கலெக்டர் பங்கேற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவில் போலீஸ் அணி வகுப்பினை தலைமையேற்று நடத்தியவர்.அதற்கு முன்தினம் ஆக.,14ல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அவரது தந்தை
 'சல்யூட்' பெண் இன்ஸ்பெக்டர்மருத்துவமனையில் அனுமதி

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பெண் இன்ஸ்பெக்டர் அதிக மாத்திரைகள் உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருநெல்வேலி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, 43. இவர் 2020 ஆக.,15ல் திருநெல்வேலி கலெக்டர் பங்கேற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவில் போலீஸ் அணி வகுப்பினை தலைமையேற்று நடத்தியவர்.அதற்கு முன்தினம் ஆக.,14ல் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அவரது தந்தை நாராயணசாமி, 83, காலமானார். இருப்பினும் தந்தையின் இறப்பிற்கு கூட செல்லாமல் மறுநாள் காலையில் சுதந்திர தின அணிவகுப்பினை நிறைவு செய்த பிறகே கிளம்பிச்சென்றார். இதற்காக பலரது பாராட்டை பெற்றதோடு, 'சல்யூட்' இன்ஸ்பெக்டர் எனவும் அழைக்கப்பட்டார்.
மகேஸ்வரி தற்போது திருநெல்வேலியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த சில தினங்களாக தீபாவளியின் போது பெய்த அடைமழையிலும் சிறப்பாக போக்குவரத்து பணிசெய்ததற்காக அதிகாரிகளால் பாராட்டப்பட்டார்.இந்நிலையில் நேற்று மகேஸ்வரி அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை உட்கொண்டார். ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.,வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி போலீசில் பணி அழுத்தம் காரணமாக சமீபத்தில் எஸ்.ஐ.,க்கள் இசக்கிமுத்து, 55, பழனி, 52 விஷம் குடித்து தற்கொலை செய்தனர். எஸ்.ஐ.,அருணாசலம் தன் நிலையை ஆடியோவாக வெளியிட்டார். அப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்ட போலீஸ் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு அருணாசலத்தை அழைத்து குறைகளை கேட்டறிந்தார். திருநெல்வேலியில் போலீசில் 30க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியும் பணிஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டாரா, வேறு உடல்பாதிப்பு காரணமாக அளவுக்கதிகமான மாத்திரைகள் உட்கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X