அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி பெயரை கெடுக்க முயற்சி: மாஜி எம்.பி., விளக்கம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
குன்னுார்:''என்னை தள்ளிவிட்டு ரத்தம் வரும் வரை தாக்கினர்; கட்சி பெயரையும் கெடுக்க முயற்சி செய்துள்ளனர்,'' என, சர்ச்சையில் சிக்கிய நீலகிரி முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.நீலகிரி தொகுதி, அ.தி.மு.க., மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணன்,56. குன்னுார் முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த இவர், தீபாவளியன்று, அருகில் இருந்த உறவினர் கோபியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு,

குன்னுார்:''என்னை தள்ளிவிட்டு ரத்தம் வரும் வரை தாக்கினர்; கட்சி பெயரையும் கெடுக்க முயற்சி செய்துள்ளனர்,'' என, சர்ச்சையில் சிக்கிய நீலகிரி முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நீலகிரி தொகுதி, அ.தி.மு.க., மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணன்,56. குன்னுார் முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த இவர், தீபாவளியன்று, அருகில் இருந்த உறவினர் கோபியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு, மாஜி எம்.பி.,க்கும், உறவினர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. மதுபோதையில், ரத்தம் சொட்ட, சொட்ட நிர்வாணமாக இருந்த 'மாஜி'யை, 'வீடியோ' எடுத்துள்ளனர்.

தொடர்ந்து, கோபியின் குடும்பத்தினர், குன்னுார் போலீசில் கோபாலகிருஷ்ணன் மீது புகார் கொடுத்தனர்.தகாத வார்த்தையில் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக கோபாலகிருஷ்ணன் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி, கைது செய்யப்பட்ட கோபி, ஜாமினில் விடப்பட்டார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில், 'இந்த சம்பவத்தில், முன்விரோத காரணம் உள்ளது. என்னை, தந்தையும், மகனும் தள்ளிவிட்டு ரத்தம் வரும் வரை தாக்கினர். என் பெயரையும், கட்சி பெயரையும் கெடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சிலர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர உள்ளேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X