பொது செய்தி

தமிழ்நாடு

அலைமோதிய பயணியர் கூட்டம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேலம்: தீபாவளி முடிந்து, பணி இடங்களுக்கு மக்கள் படையெடுத்ததால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை, மக்கள் சொந்த ஊரில் கொண்டாடினர். தொடர்ந்து, நான்கு நாள் விடுமுறை முடிந்து, நேற்று தங்கள் பணி இடங்களுக்கு திரும்பினர். இதனால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல, பயணியர் கூட்டம் அலைமோதியது. அதேநேரம்

சேலம்: தீபாவளி முடிந்து, பணி இடங்களுக்கு மக்கள் படையெடுத்ததால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை, மக்கள் சொந்த ஊரில் கொண்டாடினர். தொடர்ந்து, நான்கு நாள் விடுமுறை முடிந்து, நேற்று தங்கள் பணி இடங்களுக்கு திரும்பினர். இதனால், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல, பயணியர் கூட்டம் அலைமோதியது. அதேநேரம் திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பயணியர், சேலம் வந்து, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கும், பெங்களூருக்கும் சென்றனர். ஆனால், அந்த தடத்தில் இயக்கப்பட்ட பல பஸ்களை, அதிகாரிகள் சென்னைக்கு திருப்பிவிட்டனர். இதனால், தொழில் நகரங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல், பயணியர் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் அவலம் நேரிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X