தமிழ்நாடு

வறண்டு கிடக்கும் 228 நீர்நிலைகள்; கூடுதல் மழை பெய்தும் பலனில்லை

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 228 நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், கூடுதல் மழை பெய்தும் பலனில்லை. சேலம் மாவட்டத்தில் சாரல், மித, கனமழை என, ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சங்ககிரியில், 10.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இடைப்பாடி, 10, சேலம், 4.5, பெத்தநாயக்கன்பாளையம், 4, காடையாம்பட்டி, 3, ஆணைமடுவு, 2, ஆத்தூர், 0.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை,

சேலம்: சேலம் மாவட்டத்தில், 228 நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், கூடுதல் மழை பெய்தும் பலனில்லை.
சேலம் மாவட்டத்தில் சாரல், மித, கனமழை என, ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சங்ககிரியில், 10.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இடைப்பாடி, 10, சேலம், 4.5, பெத்தநாயக்கன்பாளையம், 4, காடையாம்பட்டி, 3, ஆணைமடுவு, 2, ஆத்தூர், 0.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலத்தில், 251.8 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான மழை யளவு, 217.2 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 16 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. தொடர் மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சேலம் மாநகரில், பள்ளப்பட்டி ஏரி, 75 சதவீதம், குமரகிரி ஏரி, 50 சதவீதம் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள, 430 நீர்நிலைகளில், 40 முழுமையாக நிரம்பிவிட்டன. 13 நீர்நிலை, 75 சதவீதம், 39 நீர்நிலை, 50 சதவீதமும், 110 நீர்நிலையில், 50 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் தேங்கியுள்ளது. 228ல் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. சேலம் மாவட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது: இயல்பை விட, கூடுதல் மழை பெய்தும், மாவட்டத்தில், 430 நீர் நிலைகளில், 228ல், தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சி பாராமல், 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற, தமிழக அரசு முனைப்புகாட்ட வேண்டும். திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு ஓடும் மழைநீர், நாமக்கல் மாவட்டம், நஞ்சடையார் பகுதியில், காவிரியில் கலந்து, பின் வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுத்து, நீர்நிலைகளுக்கு திருப்பிவிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஆணைமடுவு: வாழப்பாடி அருகே, ஆணைமடுவு அணை நீர்மட்டம், 67.25 அடி. அதில், தற்போது, 43.14 அடி அளவில், தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு, 35 கனஅடி நீர்வரத்து உள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கரியகோவில் அணை நீர்மட்டம், 52.49 அடி. அணைக்கு வரும், 136 கனஅடி நீர் அப்படியே, வெளியேற்றப்பட்டு வருகிறது. அது, பேளூர், குறிச்சி, கொட்டவாடி, கல்யாணகிரி, அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், சின்னமசமுத்திரம், எருமசமுத்திரம் ஆகிய ஆயக்கட்டுகளை சென்றடைகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X