பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

Added : நவ 08, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரிடர் மேலாண் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், சேலம் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்பவரை மீட்பது, உயிர் காக்கும் முதலுதவி

சேலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரிடர் மேலாண் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், சேலம் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்பவரை மீட்பது, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, நேற்று ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. அதேபோல், காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில், பண்ணப்பட்டி ஏரியில், தண்ணீரில் சிக்கியவரை மீட்க ஒத்திகை நடந்தது. மேலும், ஆத்தூர் தீயணைப்பு துறை சார்பில், மணிவிழுந்தான் ஏரியிலும், வாழப்பாடி தீயணைப்பு துறையினர், கொட்டவாடி வசிஷ்ட நதியிலும், இடைப்பாடி தீயணைப்பு துறையினர், பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையோரமும் ஒத்திகை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X