உயிரியல் பூங்காவை ரசித்த 10 ஆயிரம் பேர்

Added : நவ 08, 2021
Advertisement
சேலம்: உயிரியல் பூங்காவை, 4 நாளில் 10ஆயிரம் பேர் ரசித்த தால், 1.80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையால், 4 நாள் தொடர் விடுமுறையால், உயிரியல் பூங்காவுக்கு, சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து, பூங்கா வனச்சரக அலுவலர் சுப்ரமணியம் கூறியதாவது: கொரோனா கட்டுப்பாடு

சேலம்: உயிரியல் பூங்காவை, 4 நாளில் 10ஆயிரம் பேர் ரசித்த தால், 1.80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையால், 4 நாள் தொடர் விடுமுறையால், உயிரியல் பூங்காவுக்கு, சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து, பூங்கா வனச்சரக அலுவலர் சுப்ரமணியம் கூறியதாவது: கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின், அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். கடந்த, 4 நாளில், 10 ஆயிரத்து, 25 சுற்றுலா பயணியர் வந்தனர். அவர்கள் மூலம் நுழைவு கட்டணமாக, ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 240 ரூபாய் வருவாய் கிடைத்தது. அத்துடன், வாகன நிறுத்துமிட கட்டணம், பேட்டரி கார் மூலமும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புது ஏரியில் உற்சாகம்: சேலம் மாவட்டத்தில் கனமழையால், கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. அதில் இருந்து உபரி நீர் வெளியே செல்கிறது. நேற்று, சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X