பொது செய்தி

தமிழ்நாடு

10 வரை வானிலைப்படி வேளாண் ஆலோசனை

Added : நவ 08, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: வரும், 10 வரை வானிலைப்படி வேளாண் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வானிலை பதிவாளர் பிரபாகரன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வரும், 10 வரை, லேசான, மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை, 22 முதல், 29 டிகிரி

பனமரத்துப்பட்டி: வரும், 10 வரை வானிலைப்படி வேளாண் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வானிலை பதிவாளர் பிரபாகரன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் வரும், 10 வரை, லேசான, மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை, 22 முதல், 29 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு, 0 முதல், 6 கி.மீ., வீசக்கூடும். வயல்களில் வடிகால் வசதி அமைத்து, பயிர் சேதத்தை தவிர்க்கலாம். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். மல்லிகையில் சிவப்பு சிலந்திப்பேனை கட்டுப்படுத்த, புரோபகைட், 57 இசி 2 மிலி அல்லது பென்ஜாகுயின் 10 இசி 2 மிலி என்ற அளவில் தெளிக்கவும். மிளகாய் செடியில் இலை பேனை கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீருக்கு, இமிடாகுளோரோபிட், 17.8 எஸ்எல் மிலி அல்லது அசிட்டாமேட்ரிட், 20 எஸ்பி, 1 கிராம் என்ற அளவில் தெளிக்கவும். கத்தரியில் தண்டு, காய் துளைப்பானை கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறி ஹெக்டேருக்கு, 12 வைக்கலாம். இல்லையெனில் ஹெக்டேருக்கு ப்ளுபெண்டிஅமைடு 20 டபியுஜி, 375 கிராம் அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். பருத்தியில் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, அஸ்ட்மாபிரைட், 20 சதவீதம் எஸ்பி., 50 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம். நிலக்கடலையில் வேரழுகல் நோய் வர வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, காப்பர் ஆக்ஸிகுளோரைடு, 2 கிராம் கலந்து வேர் பகுதியை சுற்றி மண் நனைக்கவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X