பொது செய்தி

தமிழ்நாடு

அதி கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை மையம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்,'' என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல்
IMD, Tamilnadu, Heavy Rain, இந்திய வானிலை மையம், அதி கனமழை, எச்சரிக்கை

சென்னை: ‛‛தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்,'' என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.


latest tamil news


அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-நவ-202112:38:45 IST Report Abuse
Ramesh Sargam அரசின் உதவியையே முழுவதும் எதிர்நோக்காமல், மக்களும் தங்களால் முயன்ற அளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்வது சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X