சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி - கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: நடந்து சென்ற மாணவர்கள்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
நீலகிரி: ஊட்டி - கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேபோல், குன்னுாரில் மண்சரிவு ஏற்பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் நடந்தே சென்றனர்.நீலகிரி முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரிக்கு கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானம் மேக
ஊட்டி, கோத்தகிரி சாலை, மரம் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு, குன்னுார், நிலச்சரிவு, நடந்து சென்ற மாணவர்கள்,

நீலகிரி: ஊட்டி - கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேபோல், குன்னுாரில் மண்சரிவு ஏற்பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் நடந்தே சென்றனர்.

நீலகிரி முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரிக்கு கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானம் மேக மூட்டத்துடன் குளிரான கால நிலை நிலவுகிறது. இன்று (நவ.,8 ம் தேதி) காலை, 8:00 மணி நிலவரப்படி, சராசரி 1.25 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news


ஊட்டி - கோத்தகிரி சாலையில், மைனலை பகுதியில் அடுத்தடுத்து ஐந்து கற்பூரம், சீகை மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தா தலைமையில், ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று 'பவர் மெஷின்' உதவியுடன் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போக்குவரத்து சீரானது.

நீலகிரி மாவட்டத்தில், 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருந்தாலும், இதுவரை யாரும் தங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபாயகரமான பகுதியில் வசிப்பவர்கள் அந்தந்த பகுதி வருவாய் துறையை அணுகி நிவாரண முகாம்களில் தங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


குன்னுாரில் நடந்தே சென்ற மாணவர்கள்



latest tamil news


நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நள்ளிரவு கன மழை பெய்தது. இதில், குன்னூர் - காட்டேரி அணை சேலாஸ் சாலையில் இன்று காலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கேத்தியில் இருந்து சேலாஸ், குன்னூர் பகுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் நடந்தே சென்றனர். தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X