சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செவிலியரை தரக்குறைவாக பேசிய வி.சி.க., பிரமுகர் தலைமறைவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்த செவிலியரை தரக்குறைவாக பேசியதாக வி.சி.க., பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் 37. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் தொழில் அதிபராகவும் இருந்து

காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்த செவிலியரை தரக்குறைவாக பேசியதாக வி.சி.க., பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் 37. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி தீபாவளி அன்று நள்ளிரவு காரில் அளவுக்கு அதிகமான மது போதையில் வந்தவர் பள்ளத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மீது காரை மோதியுள்ளார். இதில், காயமடைந்த மோகன்தாஸை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு, பள்ளத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளித்த செவிலியரை தரக்குறைவாக பேசி தகராறு செய்துள்ளார். மேலும் தகவலறிந்து மருத்துவமனை வந்த போலீஸாரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இந்நிலையில், மோகன்தாஸ் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய நிலையில், அரசு ஆரம்பசுகாதார நிலைய நர்ஸ் வகிதாபானு, தன்னை மோகன்தாஸ் அவதூறாக பேசி அவமானப்படுத்தியதாக பள்ளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய மோகன்தாஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X