பொது செய்தி

இந்தியா

மறைந்த ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்; ஜனாதிபதி வழங்கினார்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு ஜனாதிபதி வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (நவ.,08) நடைபெற்றது. இதில், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ, 10 பேருக்கு பத்ம பூஷன், 7 பேருக்கு பத்ம விபூஷண் என 119
PadmaAwards2020, Padma Vibhushan, Padma Shri, President, RamnathKovind, பத்ம விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன், ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

புதுடில்லி: 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு ஜனாதிபதி வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (நவ.,08) நடைபெற்றது. இதில், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ, 10 பேருக்கு பத்ம பூஷன், 7 பேருக்கு பத்ம விபூஷண் என 119 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. அவர்களின் உறவினர்கள் விருதினை பெற்றுக்கொண்டனர். அதேபோல் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹாக்கி வீராங்கனை ராணி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-நவ-202100:45:14 IST Report Abuse
DARMHAR செத்துப்போன பிறகும் அவர்கள் பெயரில் அளிக்கப்பட்ட விருதுகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன பயன்?
Rate this:
Cancel
08-நவ-202120:10:26 IST Report Abuse
அப்புசாமி இங்கே மக்கள் வெள்ளத்தில் கஷ்டப்பட்டா அவிங்களுக்கு கவலையில்லே... விழா கொண்டாடுவாங்க. இதே தலிவர்கள ஒருத்தர் செத்தா நாடு முழுக்க ஏழு நாள் எழவு கொண்டாடணும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-நவ-202119:48:28 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ்கரன் அவங்களுக்கு சொம்படிக்கிறஎல்லாருக்கும் கொடுத்தான் பின்பு தேர்தல் நேரத்தில் அவார்ட்ஸ் வாப்ஸிசெய்தான் இருந்தும் BJP வென்றது இதுல ஹயிலைட் என்னவென்றால்நேரு ,இந்திரா , ராஜிவ் போன்ற எல்லோருக்கும்பாரத ரத்ன வாங்கிக்கொண்டார்கள் சிறிதும் வெட்கமில்லாமல் , தப்பித்தவரிஇவனுக ஆட்சியில் இருந்தா சோனியா பப்பு பப்புவுக்கும் கிடைத்திருக்கும்முக்கண்ணனும் சூரியும் வாயைமூடிக்கொண்டிருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X