மறைந்த ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்; ஜனாதிபதி வழங்கினார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மறைந்த ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்; ஜனாதிபதி வழங்கினார்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு ஜனாதிபதி வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (நவ.,08) நடைபெற்றது. இதில், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ, 10 பேருக்கு பத்ம பூஷன், 7 பேருக்கு பத்ம விபூஷண் என 119
PadmaAwards2020, Padma Vibhushan, Padma Shri, President, RamnathKovind, பத்ம விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன், ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

புதுடில்லி: 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு ஜனாதிபதி வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (நவ.,08) நடைபெற்றது. இதில், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ, 10 பேருக்கு பத்ம பூஷன், 7 பேருக்கு பத்ம விபூஷண் என 119 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news



மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. அவர்களின் உறவினர்கள் விருதினை பெற்றுக்கொண்டனர். அதேபோல் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹாக்கி வீராங்கனை ராணி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X