பொது செய்தி

தமிழ்நாடு

கொடிவேரி தடுப்பு அணையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த அக்.,12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பால் நீர் வரத்து அதிகரித்தது. இதனையடுத்து நேற்றிரவு
கொடிவேரி தடுப்பு அணையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த அக்.,12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பால் நீர் வரத்து அதிகரித்தது.

இதனையடுத்து நேற்றிரவு (நவ.,07) 9 மணிக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து தடுப்பு அணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையான அறிவிப்பு வரும்வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X