பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4+ 1)
Share
Advertisement
சென்னை: ‛‛செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப்பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில்
TN, HeavyRain, Weather, Report, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மிக கனமழை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு,

சென்னை: ‛‛செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news


தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப்பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும்.

இன்று (நவ., 8 ம் தேதி): செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement

நாளை 9ம் தேதி: திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழையும், துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலுார், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


latest tamil news


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


latest tamil news


பெரம்பூர் (சென்னை) 14 செ.மீ., செய்யூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்) தலா 13 செ.மீ., தண்டையார்பேட்டை (சென்னை) 10 செ.மீ., அயனாவரம், சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), கும்மிடிபூண்டி, பள்ளிப்பட்டு, அம்பத்துார், பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலுார்) தலா 9 செ.மீ., தாம்பரம் (செங்கல்பட்டு), கோவை தெற்கு, புதுச்சேரி, ஆலங்காயம் (திருப்பத்துார்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), டி.ஜி.பி., அலுவலகம் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 8 செ.மீ., சென்னை, ஏ.சி.எஸ்.கல்லுாரி, எம்.ஜி.ஆர்.நகர், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செங்கல்பட்டு, வல்லம், வளவனுார் (விழுப்புரம்) தலா 7 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்


இன்று 8 ம்தேதி முதல் 11ம் தேதி வரை: தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


latest tamil news


இன்று 8ம் தேதி, நாளை 9ம் தேதி வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை 9ம் தேதி முதல் 10ம் தேதி வரை: தெற்கு வங்கக்கடல், மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் நாளை 9ம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்


இன்று மற்றும் நாளை வரை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
08-நவ-202117:18:36 IST Report Abuse
INDIAN Kumar வருண பகவானின் கருணை மழையாக பொழிகிறது
Rate this:
Cancel
MUPPILIKONE RATHINAM REVATHI - Singapore ,சிங்கப்பூர்
08-நவ-202114:39:32 IST Report Abuse
MUPPILIKONE RATHINAM REVATHI மழை நீரை சேமித்து வைக்கவும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
08-நவ-202114:18:19 IST Report Abuse
Suri பணமதிப்பிழக்க தினத்துக்கும் இந்த கண மழைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X