பொது செய்தி

தமிழ்நாடு

காவேரிப்பட்டணம் சுற்றுப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது, மணல் கடத்தல் ஜோர்

Added : நவ 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தில் மது விற்பனை, மணல் கடத்தல் ஆகிய சட்ட விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கிறது.கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும் கிருஷ்ணகிரியை தலைமையாக கொண்டு, ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் செயல்படு கிறது. இதில் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தில் மது விற்பனை, மணல் கடத்தல் ஆகிய சட்ட விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கிறது.


கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும் கிருஷ்ணகிரியை தலைமையாக கொண்டு, ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் செயல்படு கிறது. இதில் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. இதில், சாப்பரம், சவுளூர், மலையாண்டஹள்ளி, நெடுங்கல் சுற்று வட்டாரத்தின் பல இடங்களில், 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஜெய்னூர் தென்பெண்ணை ஆற்றில் போலீஸ் ஆசியுடன் மணல் கடத்தலும் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், காவேரிப்பட்டணத்தில் எஸ்.பி., கூடுதல் கவனம் செலுத்தி, குற்ற செயல்களுக்கு முடிவு கட்ட ?பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X