பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் சவாரி, பயணிகள் வர தடை

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால், பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால், பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஏற்கனவே குளிக்க தடை தொடரும் நிலையில், நேற்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மடம் செக்போஸ்டிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X