பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் பாதிப்பு மிக குறைவாகவே இருக்கும்: ஐ.எம்.ஏ., தலைவர் உறுதி

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஈரோடு: ''கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும்,'' என்று, ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.ஈரோடு அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவம் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த

ஈரோடு: ''கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும்,'' என்று, ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.


ஈரோடு அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவம் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் நடமாடும் வாகனம் மூலம், கிராமங்கள் தோறும் சென்று புற்று நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த அலையினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் ஏராளமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா நோய்க்கான மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் ஆணை, சுகாதாரத்துறை அனுமதித்தால் மட்டுமே, மாத்திரையை பயன்படுத்துவோம். இந்தியாவில் உள்ள அனைத்து சிகிச்சை முறைகளையும் வரவேற்கிறோம். ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்பட ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது. எல்லேருக்கும் அனைத்து வியாதிகளையும் ஒரே மருத்துவ சிகிச்சை மூலம் தீர்க்க முடியாது. ஒரே மருத்துவர் எல்லா சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளக்கூடாது. அதாவது மிக்சோபதி என்ற மருத்துவ திட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X