பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் உபரிநீர் திறப்பு; ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 08, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக, மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி,

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக, மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி, 103.86 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து, 5,025 கன அடியாக இருந்தது. அணை பாதுகாப்பு கருதி நீர்மட்டம், 104 அடியை எட்டியதும் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதன்படி நேற்று மாலை, 4:45 மணிக்கு, அணை நீர்மட்டம், 104 அடியை தொட்டதும், பவானி ஆற்று மதகுகள் வழியாக, 3,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், உபரி நீராக, 3,500 கன அடி திறக்கப்பட்டுள்ளதால், 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X