சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலரில் 'லிப்ட்' கேட்டு சென்ற மூதாட்டி தவறி விழுந்து சாவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி, தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எகிலெரியன்கொட்டாயை சேர்ந்தவர் மலர்கொடி, 60. இவர் கடந்த, 5ல் தப்ளமேடு - மத்தூர் சாலையில், பட்லப்பள்ளி கூட்ரோடு அருகே சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். டூவீலரை ஓட்டியவர் தாறுமாறாக ஓட்டியதால்,

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி, தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எகிலெரியன்கொட்டாயை சேர்ந்தவர் மலர்கொடி, 60. இவர் கடந்த, 5ல் தப்ளமேடு - மத்தூர் சாலையில், பட்லப்பள்ளி கூட்ரோடு அருகே சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். டூவீலரை ஓட்டியவர் தாறுமாறாக ஓட்டியதால், நிலைதடுமாறி கீழே விழுந்த மலர்கொடிக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. டூவீலரை ஓட்டிய நபர் நிற்காமல் சென்றுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மலர்கொடி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மலர்கொடி தம்பி மகன் பிரபு, 31, புகார்படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X