பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையிலிருந்து 960 கன அடி தண்ணீர் திறப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளதால், தென்பெண்ணையாற்றில், 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. கடந்த மாதம், 29ல், 1,343 கன அடியாக இருந்த நீர்வரத்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளதால், தென்பெண்ணையாற்றில், 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. கடந்த மாதம், 29ல், 1,343 கன அடியாக இருந்த நீர்வரத்து கடந்த, 3ல், 559 கன அடியாக குறைந்தது. பின் பரவலாக பெய்த மழையால் நேற்று, 944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து நேற்று முதல்போக சாகுபடிக்கு, இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம், 177 கன அடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 960 கன அடி என மொத்தம், 1,137 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையை தொட்டு தண்ணீர் ஓடுகிறது. அணையின் மொத்த உயரம், 52 அடியில், நேற்று நீர்மட்டம், 51.10 அடியாகவும், நீர்இருப்பு, 1.56 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X