மேகதாது அணை விவகாரம் காங்., பாத யாத்திரை அறிவிப்பு| Dinamalar

மேகதாது அணை விவகாரம் காங்., பாத யாத்திரை அறிவிப்பு

Added : நவ 08, 2021
Share
பெங்களூரு : கர்நாடகாவில் மேகதாது அணையை விரைவில் கட்ட வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.கர்நாடகா மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது.இதற்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா காங்., மூத்த

பெங்களூரு : கர்நாடகாவில் மேகதாது அணையை விரைவில் கட்ட வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது.இதற்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு சட்ட ரீதியிலான உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையின்றி அரசியல் செய்து பிரச்னையை பெரிதுபடுத்தி வருகிறது.கர்நாடகாவில் காங்., கூட்டணி ஆட்சி இருந்தபோது நாங்கள் அனுப்பிய திட்ட மாதிரிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று கூட நாங்கள் பணியை துவங்க முடியும். இதற்கு உச்ச நீதிமன்ற தடை கூட இல்லை.

மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.இந்த விவகாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சில அரசியல் நெருக்கடி மற்றும் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. எனவே தான் இந்த திட்டம் தாமதமாகி வருகிறது.மேகதாது அணை கட்டுமான பணியை விரைவில் துவங்க வலியுறுத்தி, அடுத்த மாதம் முதல் வாரத்தில், மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X