வரத்து குறைவு எதிரொலி; தக்காளி விலை எகிறியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைவு எதிரொலி; தக்காளி விலை எகிறியது

Added : நவ 08, 2021
Share
சேலம்: வரத்து குறைவால், முதல் ரக தக்காளி விலை, கிரேடுக்கு, 900 ரூபாய் உயர்ந்துள்ளது. சேலம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், அம்மாபேட்டை காந்தி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களுக்கு, மாவட்டத்தின் புறநகர், பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட தக்காளி வியாபாரி சங்க துணை செயலர் கோபி கூறியதாவது: சேலம் மார்க்கெட்

சேலம்: வரத்து குறைவால், முதல் ரக தக்காளி விலை, கிரேடுக்கு, 900 ரூபாய் உயர்ந்துள்ளது. சேலம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், அம்மாபேட்டை காந்தி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களுக்கு, மாவட்டத்தின் புறநகர், பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட தக்காளி வியாபாரி சங்க துணை செயலர் கோபி கூறியதாவது: சேலம் மார்க்கெட் பகுதிக்கு பாலக்கோடு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. தொடர் மழையால், செடியில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே போச்சம்பள்ளி, தாராபுரம், பழநி ஆகிய இடங்களில் இருந்து வரும் தக்காளி, இரு மாதங்களுக்கு முன்பே நின்றுவிட்டது. வழக்கமாக, 10 லாரி, 15 ஈசர் வண்டிகளில் தக்காளி வரத்து இருக்கும். ஈசர் வண்டியில், 80 கிரேடு (ஒரு கிரேடு, 25 கிலோ), லாரியில், 140 கிரேடு இருக்கும். 10 நாளாக, 6 லாரி, 4 ஈசர் வண்டிகளில் மட்டும் தான் தக்காளி கொண்டு வரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து, ஒருநாள் விட்டு ஒருநாள், 6 லாரிகளில் தக்காளி வரும். தற்போது, 2 லாரிகளில் மட்டும் கொண்டு வரப்படுகிறது. இதனால் முதல் ரக தக்காளி கிரேடு, 500க்கு விற்றது, தற்போது விலை உயர்ந்து, 1,400 ரூபாய், இரண்டாம் ரகம், 400க்கு விற்றது, 800, மூன்றாம் ரகம், 150க்கு விற்றது, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடைகளில் முதல் ரக தக்காளி, 70 ரூபாய், இரண்டாம் ரகம், 50, மூன்றாம் ரகம், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X