பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நவம்பரில் 5ம் முறை நிரம்ப வாய்ப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நவம்பரில், 5ம் முறை நிரம்ப வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம், 15 ஆயிரத்து, 740 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 29 ஆயிரத்து, 380 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம், 114.44 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 116.10 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த

மேட்டூர்: மேட்டூர் அணை நவம்பரில், 5ம் முறை நிரம்ப வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம், 15 ஆயிரத்து, 740 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 29 ஆயிரத்து, 380 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம், 114.44 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 116.10 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., அணை நிரம்ப இன்னும், 6 டி.எம்.சி., நீர் மட்டும் தேவை என்பதால், ஒரு வாரத்தில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை கட்டி, 87 ஆண்டான நிலையில் இதுவரை, 40 ஆண்டு அணை நிரம்பியுள்ளது. அதிலும் குறிப்பாக, 1966 நவ., 16, 1972 நவ., 26, 1997 நவ., 30, 1999 நவ., 8 என, நவம்பரில் நான்கு ஆண்டுகள் மட்டும், அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நடப்பாண்டு அணை நிரம்பினால், 41ம் ஆண்டாகவும், நவம்பரில், 5ம் முறையாகவும் நிரம்பும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X