நாகப்பட்டினம் : பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்., நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என, 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
நாகை அருகே பனங்குடியில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்., நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக, வருவாய் துறை மூலமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பனங்குடியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், சி.பி.சி.எல்., நிறுவன விரிவாக்கம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைவதற்கு விவசாயிகள் ஒரு அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது. நவ. 13ம் தேதி முதல், 45 கிராமங்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி, 16ம் தேதி, கலெக்டர் அலுவலக வாயிலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE