பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே, ஏரி கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் பெரிய ஏரி, 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பையூர், கனிகலுப்பை, எஸ்.வி.நகரம் உள்ளிட்ட பல கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை அதிகளவில் பெய்து வருவதால், கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து, ஆரணி டவுன்

ஆரணி: ஆரணி அருகே, ஏரி கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் பெரிய ஏரி, 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பையூர், கனிகலுப்பை, எஸ்.வி.நகரம் உள்ளிட்ட பல கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை அதிகளவில் பெய்து வருவதால், கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து, ஆரணி டவுன் பகுதியில் வரும் ஏரிகால்வாய் மூலம் பையூர் ஏரிக்கு நீர்வரத்து வந்தது. ஆனால் கால்வாய் ஆக்கிரமித்து இருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால் கால்வாய் உடைந்து அருகில் உள்ள, ஆரணி டவுன் கே.கே.நகர், சீதாராமன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. பாம்பு மற்றும் வி?ஷ ஜந்துகள் குடியிருப்பு பகுதியில் வர ஆரம்பித்துள்ளன. பையூர் ஏரி நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள மேலும், 20 ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X