தி.மலை மாவட்டத்தில் கோமாரி நோய் அதிகரிப்பு; கால்நடைகள் பலியாகும் பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலை மாவட்டத்தில் கோமாரி நோய் அதிகரிப்பு; கால்நடைகள் பலியாகும் பரிதாபம்

Added : நவ 08, 2021
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கோமாரி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் உள்ளது. தமிழகத்தில் பால் உற்பத்தியில், திருவண்ணாமலை மாவட்டம், இரண்டாவது இடம் வகிக்கிறது. பால் உற்பத்தி தொழிலில், 50

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கோமாரி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் உள்ளது. தமிழகத்தில் பால் உற்பத்தியில், திருவண்ணாமலை மாவட்டம், இரண்டாவது இடம் வகிக்கிறது. பால் உற்பத்தி தொழிலில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள், பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடு, பசு மாடு, எருது மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் முறையாக நடத்தப்படாததால், தற்போது மழைக்காலம் என்பதால், கோமாரி நோய் தாக்கம் அதிகரித்து கால்நடைகள் மடிந்து வருகின்றன. இதில் கலசப்பாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, போளூர், திருவண்ணாமலை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கோமாரி நோய் தாக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு, 20 முதல், 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்னளர். இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X