சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் நண்பரானவர்கள் யார் பெரியவர் என்ற போட்டியில் பெட்ரோல் குண்டு வீச்சு

Added : நவ 08, 2021
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசி அருகே, சிறையில் நண்பர்களான இருவரிடையே யார் பெரியவர் என்ற மோதலில், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில், 12 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 21. இவர் கடந்த, 2020ல், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே, சிறையில் நண்பர்களான இருவரிடையே யார் பெரியவர் என்ற மோதலில், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில், 12 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 21. இவர் கடந்த, 2020ல், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சபரிநாதன், 21, என்பவரும் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அங்கு இருவரும் நண்பர்களாயினர். இதையடுத்து சிறையிலிருந்து இருவரும் வெளியே வந்து, சென்னையில் கூலி வேலை செய்து வந்தனர். அப்போது, தங்களில் யார்? பெரியவர் என, மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சபரிநாதன், தன் ஆதரவாளர்கள் ஏழு பேருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, சுரேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டின் கதவு எரிந்து சேதமானது. இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் விசாரித்து சபரிநாதன், அவருடன் வந்த ஏழு பேர் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் நான்கு பேர் என மொத்தம், 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X