பொது செய்தி

இந்தியா

'ஏஒய்.4.2 வகை தொற்று கவலை தேவையில்லை'

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரசில் 'டெல்டா' என்ற புதிய வகை தொற்று கடந்த ஆண்டு அக்., மாதத்தில் நம் நாட்டில் கண்டறியப்பட்டது. கடந்த ஏப்., - மே மாதங்களில் இரண்டாவது அலை தீவிரமடைய இந்த டெல்டா வகை தொற்று காரணமாக அமைந்தது.இந்நிலையில் வைரஸ்களில் ஏற்படும் மரபியல் மாற்றங்களை கண்டறிய, 'இன்சாகாக்' எனப்படும், கொரோனா மரபியல் கூட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. தொற்றில் ஏற்படும்

புதுடில்லி : கொரோனா வைரசில் 'டெல்டா' என்ற புதிய வகை தொற்று கடந்த ஆண்டு அக்., மாதத்தில் நம் நாட்டில் கண்டறியப்பட்டது. கடந்த ஏப்., - மே மாதங்களில் இரண்டாவது அலை தீவிரமடைய இந்த டெல்டா வகை தொற்று காரணமாக அமைந்தது.
இந்நிலையில் வைரஸ்களில் ஏற்படும் மரபியல் மாற்றங்களை கண்டறிய, 'இன்சாகாக்' எனப்படும், கொரோனா மரபியல் கூட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. தொற்றில் ஏற்படும் மரபியல் மாற்றங்கள், அதன் தீவிரத்தன்மைகள் குறித்து இந்த அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறது.

கொரோனா மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் பதற்றம் இருந்து வரும் நிலையில் பிரிட்டன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏஒய்.4.2 என்ற புதிய வகை தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இந்த நாடுகளில் தொற்று பரவல் திடீரென அதிகரித்தன.நம் நாட்டில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த ஏஒய்.4.2 என்ற புதிய வகை தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுவரை 17 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 'டெல்டா வகை அளவுக்கு ஏஒய்.4.2 வகை தொற்று தீவிரத்தன்மை அற்றது. அது வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு இல்லை' என, 'இன்சாகாக்' தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X