அரசு பணி வாங்கி தருவதாக ரூ.34 லட்சம் மோசடி : பலே ஆசாமி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பணி வாங்கி தருவதாக ரூ.34 லட்சம் மோசடி : பலே ஆசாமி கைது

Added : நவ 08, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பணி வாங்கி தருவதாகக் கூறி, 34 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 55; நாட்டு மருத்துவம் செய்து வருகிறார். இவருக்கு, திண்டிவனம் அரசு கல்லுாரியில், இளநிலை உதவியாளராக பணிபுரியும் ராஜேந்திரன்
 அரசு பணி வாங்கி தருவதாக ரூ.34 லட்சம் மோசடி : பலே ஆசாமி கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பணி வாங்கி தருவதாகக் கூறி, 34 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 55; நாட்டு மருத்துவம் செய்து வருகிறார். இவருக்கு, திண்டிவனம் அரசு கல்லுாரியில், இளநிலை உதவியாளராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த 10ம் தேதி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மன்னன் மனைவி பரிமளம் என்பவர், கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன், 34; என்பவரை அழைத்து வந்து முருகன், ராஜேந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, ராஜேஷ்கண்ணன் தனக்கு கூட்டுறவு துறையில் உயர் பதவியில் உள்ளவர்கள் பழக்கம் உள்ளது. படித்தவர்கள் யாராவது இருந்தால் 8 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராஜேந்திரன் தனது மருமகன் பாலாஜிக்கு வேலை வாங்கித் தரும்படி முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாய் ராஜேஷ்கண்ணனிடம் கொடுத்துள்ளார்.மேலும், ராஜேஷ்கண்ணன் அளித்த வங்கி கணக்கில் 'கூகுள் பே' மூலம் கடந்த 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நான்கு தவணைகளாக 4 லட்சம் ரூபாயை போட்டுள்ளார்.

இதேபோன்று, முருகனும் தனது மகனின் வேலைக்காக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், கொடியம் ராஜேஷ் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், மேல்பேரடிகுப்பம் கமல்தாஸ் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், பஞ்சமாதேவி அகரம் அருள்பிரகாஷ் 3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய்.திருவண்ணாமலை மாவட்டம், மங்கைநல்லுார் பூபாலன் 8 லட்சம் ரூபாய், சாத்தனுார் பகிரதன் 8 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம் 34 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுள்ளார்.

பணத்தை பெற்ற அவர் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் தராமல் ஏமாற்றியதோடு, பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து நேற்று முன்தினம் முருகன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,க்கள் இருதயராஜ். ரவீந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ராஜேஷ்கண்ணனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X