பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது வீடூர் அணை: உபரி நீர் வெளியேற்றம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : தொடர் மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான செஞ்சி, மேல்மலையனுார் போன்ற ஊர்களில் பெய்த கன மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு, அணைக்கு நீர்
 நிரம்பியது வீடூர் அணை: உபரி நீர் வெளியேற்றம்

விக்கிரவாண்டி : தொடர் மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான செஞ்சி, மேல்மலையனுார் போன்ற ஊர்களில் பெய்த கன மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,700 கன அடியாக உயர்ந்தது.இதையடுத்து, 32 அடியுள்ள அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கன அடியில், 31.1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி 534.5 மில்லியன் கன அடி நிரம்பி உள்ளது.

அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம் ஆகியோர் கண்காணித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றுமாறு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
நேற்று காலை 6:00 மணியளவில், அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு 529 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் பொதுமக்கள், குளிக்காத வகையில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றுவது குறித்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X