சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்: முகையூரில் பரபரப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே, இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி மகன் அருண்குமார், 26; இவரது நண்பர் கந்தசாமி மகன் ரவிக்குமார், 26; இருவரும் கடந்த 4ம் தேதி பைக்கில் கண்டாச்சிபுரம் சென்று வீட்டிற்கு திரும்பினர். இருதயபுரம் அருகே
 இறந்தவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்: முகையூரில் பரபரப்பு

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே, இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி மகன் அருண்குமார், 26; இவரது நண்பர் கந்தசாமி மகன் ரவிக்குமார், 26; இருவரும் கடந்த 4ம் தேதி பைக்கில் கண்டாச்சிபுரம் சென்று வீட்டிற்கு திரும்பினர். இருதயபுரம் அருகே வந்தபோது லுார்துசாமி என்பவர் வீட்டின் முன் பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தனர்.இதில், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற ரவிக்குமார் படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் மாலை 4:30 மணியளவில் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் முகையூர் குளக்கரை அருகே உடலை வைத்து, விபத்து நடந்த போது தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார். எனவே, கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் டி.எஸ்.பி., பழனிச்சாமி மற்றும் அரகண்டநல்லுார் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 5:30 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X