சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை மொழி பிரச்னையால் விடுவித்த போலீஸ்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திண்டிவனம் : குழந்தையைக் கடத்த முயன்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தும், மொழி பிரச்னையால் போலீசார் விடுவித்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மூன்று வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், திடீரென குழந்தை துாக்கிக்


திண்டிவனம் : குழந்தையைக் கடத்த முயன்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தும், மொழி பிரச்னையால் போலீசார் விடுவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மூன்று வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், திடீரென குழந்தை துாக்கிக் கொண்டு ஓட முயன்றார்.இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரைப் பிடித்து குழந்தையை மீட்டனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து, திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தனர்.

வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ராகுல் என்பது மட்டுமே தெரிய வந்தது. மொழி பிரச்னையால், அந்த வாலிபரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்த முடியவில்லை.பலத்த காயமடைந்த அந்த வாலிபருக்கு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, அந்த வாலிபர் பேசும் மொழி புரியாததால் அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். முழுமையாக விசாரணை நடத்தாமல் மொழி பிரச்னையால் அனுப்பி வைத்தது, அந்த வாலிபரை பிடித்துக் கொடுத்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X