அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள அரசிடம் மண்டியிட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை கடும் விமர்சனம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
தேனி: ‛‛முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு நமது மாநில முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார் எனவும், தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி
Annamalai, BJP, Mullaperiyar Dam, Tamilnadu, CM, Stalin, அண்ணாமலை, தமிழகம், பாஜக, பாஜ, முதல்வர், ஸ்டாலின்

தேனி: ‛‛முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு நமது மாநில முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார் எனவும், தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இன்று (நவ.,08) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.,வினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது.


latest tamil news


முல்லை பெரியாறு அணையில் ஒவ்வொரு முறையும் ஷட்டர் திறக்கும்போதும் தேனி கலெக்டர், இடுக்கி கலெக்டர், தமிழக மற்றும் கேரள அமைச்சர்கள் இருப்பதுதான் வாடிக்கை. அப்படியிருக்கையில் கேரளாவை சேர்ந்த அமைச்சர்கள் அணையை திறந்துள்ளனர். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு தமிழகத்திடம் தான் இருக்கிறது. அந்த அணையை திறப்பதற்கு தமிழகத்திற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு நமது மாநில முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார். இதனால், தமிழக அரசு உடனடியாக தமிழக மக்களுக்கு குறிப்பாக 5 மாவட்ட விவசாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-நவ-202109:08:31 IST Report Abuse
Nagarajan D விடியாத அரசு பிஜேபி தலைவர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்க முடியாமல் திணறுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது... கேள்வி கேட்க சரியான ஆள் இல்லாததால் தான் இத்தனை ஆண்டுகளாக ராமசாமி எடுபிடிகள் தமிழகத்தை நாசம் செய்தானுங்க... தி மு க வை கேட்பது போல் admk கட்சியையும் கேட்கவேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-நவ-202104:41:34 IST Report Abuse
J.V. Iyer திராவிட பாரம்பர்யம். காவிரியினால் இவ்வளவு காலம் அரசியல் பலிக்கவில்லை. இப்ப முல்லைப்பெரியாரில் சொதப்பல். ஊழலில் மட்டும் சாதுர்யம்.
Rate this:
Cancel
Karthik - india,இந்தியா
09-நவ-202104:00:56 IST Report Abuse
Karthik கூட்டணி கட்சி துரோகம் என எண்ணி கேரள அரசுக்கு முட்டு கொடுத்து தமிழக மக்களை முட்டாள் ஆக்க பார்க்கிறது தமிழக அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X