அரசியல் செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னேற்பாட்டில் அரசிடம் திட்டமிடல் இல்லை: பழனிசாமி

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: ‛‛வடகிழக்கு பருவமழை தற்போதுதான் துவங்கியிருக்கிறது. ஆனால், தி.மு.க., அரசிடம் திட்டமிடல் இல்லாததால் மழைநீர் வெளியேற வழியில்லை. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்,'' என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.சென்னையில் இன்று (நவ.,8) தி.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
தமிழகம், பருவமழை, முன்னேற்பாடு, அரசிடம் திட்டமிடல் இல்லை, எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, குற்றச்சாட்டு

சென்னை: ‛‛வடகிழக்கு பருவமழை தற்போதுதான் துவங்கியிருக்கிறது. ஆனால், தி.மு.க., அரசிடம் திட்டமிடல் இல்லாததால் மழைநீர் வெளியேற வழியில்லை. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்,'' என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னையில் இன்று (நவ.,8) தி.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே மழைநீர் வடிகின்ற இடங்களில் துார்வாரி இருக்க வேண்டும். தற்போது தான் மழையே துவங்குகிறது. இன்னும் நிறைய மழை பெய்யும்.


latest tamil newsதி.மு.க., அரசிடம் முன்னேற்பாடு இல்லை, திட்டமிடலும் இல்லை. மெத்தனமாக செயல்பட்டதால் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி முழங்கால் அளவுக்கு நிற்கிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இவர்களின் மெத்த போக்கால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர் இல்லை, மருத்துவ வசதியில்லை, தங்குமிடம் இல்லை. உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு பகுதிக்கும் கலெக்டர் தலைமையில் அதிகாரிகளை நியமித்து மழைபாதிப்புள்ள இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தோம். மழை நின்ற உடன் தண்ணீரை ராட்சச மோட்டார் வைத்து நீரை வெளியேற்றினோம்.

தற்போது மழைநீரை வெளியேற்றாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவளித்தோம். அம்மா உணவகம் மூலம் லட்சக்கணக்கானோர் பயன் பெற்றனர். தற்போது அம்மா உணவகத்தை பயன்படுத்தி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-நவ-202104:07:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் திட்டம் போட்டு ஆட்டையைப் போடுறதில நீர் தான் கில்லாடி ஆச்சே.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
09-நவ-202100:01:16 IST Report Abuse
PRAKASH.P DMK and admk thinks people are fools
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-202122:21:24 IST Report Abuse
Rajan உங்க ஆட்சில என்ன செஞ்சீங்க. மழைநீர் வடிகாலுக்காக ஒதுக்கிய அய்யாயிரம் கோடிகளை நீங்க ஏப்பம் விட்டு விட்டதாக சன் டிவி செய்திச் சேனல் சொல்கிறது. உங்கள் மீது ஏன் கிரிமினல் வழக்கு தொடரக்கூடாது. திமுகவும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இரண்டு கழகங்களும் குற்றவாளிகள்தான். திமுகவின் முந்தைய ஆட்சி காலத்திலும் என்ன செய்தனர். அவதிப்படுவது மக்கள்தான். நீங்க எல்லாரும் செளகரியமாக பங்களாக்களில் எந்த கஷ்டமும் இன்றி வசிக்கிறீர்கள். உங்கள் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகாதவாறு கட்டப்பட்டிருக்கும். மின் தடை இருக்காது உங்களுக்கு. எல்லா பொருட்களும் வீடு தேடி வரும். உடனடியாக பிரச்சினைகளை சரி செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஓட்டு போட்ட ஜனங்கள்தான் பரிதாப நிலையில் உள்ளனர். மாநகராட்சி தேர்தல்கள் வரும் போது ஒட்டு கேட்டு இரண்டு கழகங்களும் வரும். அப்போது பார்த்துக் கொள்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X