பொது செய்தி

இந்தியா

மரங்களை வெட்ட அனுமதி; நன்றி சொன்ன ஸ்டாலின்; தடை போட்ட விஜயன்; விழிக்கும் தமிழக அரசு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (126+ 11)
Share
Advertisement
கொச்சி: முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள, 15 மரங்களை வெட்டும் கேரள வனத்துறையின் அனுமதிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த உத்தரவிற்கு கேரள அரசு திடீரென தடை விதித்துள்ளதால், தமிழக அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
Tamilnadu, Kerala, Pinarayi Vijayan, Stalin

கொச்சி: முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள, 15 மரங்களை வெட்டும் கேரள வனத்துறையின் அனுமதிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த உத்தரவிற்கு கேரள அரசு திடீரென தடை விதித்துள்ளதால், தமிழக அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள, பேபி அணைகளை வலுப்படுத்த, அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை. இந்நிலையில் பேபி அணைக்கு கீழே, 15 மரங்களை வெட்ட, கேரள வனத் துறை அனுமதி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.


latest tamil news


இதற்கு காரணம், பேபி அணையை வலுப்படுத்தாமல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் நோக்கமாகும். அதற்கு மாறாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பேபி அணையை வலுப்படுத்த, மரங்கள் வெட்டப்படுவதாக வெளியான செய்தி, கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், ‛வனப் பாதுகாப்பு முதன்மை அதிகாரி தரப்பில் இந்த குளறுபடி நடந்துள்ளது. இது பற்றி, முதல்வர் அலுவலகம், வனம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகங்களுக்கு எதுவும் தெரியாது. மரங்களை வெட்டுவது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,' எனத் கூறினார்.

கேரள அரசு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு திடீரென தடை விதித்திருப்பதால், தமிழக அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதிய நிலையில், உடனடியாக அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதால், தமிழக அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (126+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-நவ-202107:33:25 IST Report Abuse
RajanRajan அடிமை அரசு ஆட்சியில் இருந்தபோது வராத தைரியம் இப்போது வருகிறது எனில் என்ன அர்த்தம் ?..
Rate this:
Cancel
Naga Subramanian - Kolkatta,இந்தியா
10-நவ-202106:56:57 IST Report Abuse
Naga Subramanian முல்லை பெரியாறு என்பதில் "பெரியார்" என்கிற வார்த்தையும் வருகிறது. இவர்கள் உலக மகா பகுத்தறிவு வாதிகள் அல்லவா? இந்த விஷயத்தில் இந்துக்களையோ அல்லது மோடியையோ வம்புக்கு இழுத்து எப்படி வசை பாடலாம் என யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்பொழுதுதான், பெரியாரின் ஆன்மா சாந்தியடையும். ஏனென்றால், இவர்கள் உலக மகா பகுத்தறிவு வாதிகள்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202106:14:54 IST Report Abuse
Mani . V இதில் வேறு விதமான உள்குத்து நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. மரங்களை வெட்ட அனுமதி அளித்தது பினராயி விஜயன் தெரியாமல் இருக்குமோ? என்று போட்டுக் கொடுக்கும் தொனியில்தான் (ஏனென்றால் தமிழக மக்களுக்கு நன்மை நடந்து விடவே கூடாது என்று) பினராயி விஜயனுக்கு நன்றி கடிதம் எழுதுவது மாதிரி இவர் ஆக்ட் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X