அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் கொள்முதல் தடை நீக்கம்; மோடி அரசை விமர்சிக்கும் காங்.,

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டில்லி: இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரிட்டன் விமான தயாரிப்பு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் கொள்முதல் தடை மோடி அரசால் நீக்கப்பட்டதை காங்., கட்சி விமர்சித்துள்ளது.கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தியாவை ஆட்சி செய்தபோது பிரிட்டனின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை

டில்லி: இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரிட்டன் விமான தயாரிப்பு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் கொள்முதல் தடை மோடி அரசால் நீக்கப்பட்டதை காங்., கட்சி விமர்சித்துள்ளது.



latest tamil news




கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தியாவை ஆட்சி செய்தபோது பிரிட்டனின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை சட்டவிரோதமாக காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இது அப்போது பெரும் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஒப்பந்தத்துக்காக காங்கிரஸ் கட்சியில் 450 கோடி ரூபாய் லஞ்ச தொகையை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக அப்போது பாஜ., குற்றம் சாட்டி இருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அப்போது காங்கிரஸ் தலைமை மறுத்தது. இந்த சர்ச்சை துவங்கியதுமுதல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு இந்த தடையை நீக்கியுள்ளது.

இதுகுறித்து தற்போது கர்நாடக காங்., பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


latest tamil news




'அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை ஓர் போலி நிறுவனம் என்று முன்னதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதனை ஆமோதித்து இருந்தார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜ., மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீதான தடையை நீக்கியது.

இப்போது கொள்முதல் தடையும் நீக்கியுள்ளது. அப்போது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆவணங்களை காட்டி ஊடகங்கள் அனைத்தும் கட்டுரைகளை வெளியிட்டன. இதேபோல தற்போது மோடி ஆட்சியில் ஊடகங்கள் செயல்படுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202123:02:04 IST Report Abuse
அப்புசாமி நெனச்சேன். இப்பல்லாம் போரிஸ் ஜாண்சனோட கட்டிப்புடி , ஈஷல் எல்லாம் அதிகமா இருக்கே... சீக்கிரமா ராணுவ தளவாடம் வாங்கும் அறிவிப்பு வரும்னு பதிவும் போட்டிருந்தேன். வெஸ்ட்லேண்ட் குழுமமே பா.ஜ வில் சேந்து, நல்லவங்களா மாறிட்டாங்க. அதனால், ஆத்மநிர்பரா கீழே அவிங்களோட வியாபாரம் செய்யலாம். ஓக்கே.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-நவ-202122:26:24 IST Report Abuse
RajanRajan அகஸ்டா மீது பொருளாதார தடை விதித்தது பிஜேபி தடையை அகற்றியதும் பிஜேபி. அன்று நீங்க ஊழலுக்கு வழிவகுதீர்கள் தடை செய்ய பிஜேபி போராடியது. இன்று அகஸ்டாவுக்கு கிளீன் போல்ட் விலை குறைப்பு வியாபார அனுமதி. நாடுகளுக்கிடையே பொருளாதார தடை தடை நீக்கம் என்பதெல்லாம் ஒரு வழக்கமான நடைமுறை தானே. இன்றைய உலக சூழ்நிலையிலே நம் ராணுவம் தரமிக்கதாக்க பட வேண்டிய நிர்பந்தம். அதற்கான வழிமுறைகளை பிஜேபி அரசு மேற்கொள்ளுகிறது. இதுலே போயி நீ ஏன் கொந்தளிக்கிறே. நாடு மேலே ரொம்ப அக்கறையா அலட்டி இத்தாலிய விஸ்வாச ஊழியமா ?? திருந்துற வழிய பாபியா அதை வுட்டுட்டு....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-நவ-202121:27:23 IST Report Abuse
Kasimani Baskaran அதற்காக காங்கிரஸ் கமிசன் வாங்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X