முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு

Updated : நவ 09, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை :மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு, மர்மமான பைகளுடன் இரண்டு நபர்கள் செல்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று அவரது வீட்டிற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல தொழிலதிபரும், 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில், தன் குடும்பத்துடன் வசித்து
டாக்ஸி டிரைவர் தகவல், முகேஷ் அம்பானி, வீடு, போலீஸ், பாதுகாப்பு



மும்பை :மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு, மர்மமான பைகளுடன் இரண்டு நபர்கள் செல்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று அவரது வீட்டிற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல தொழிலதிபரும், 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.பிப்ரவரயில் இந்த வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


latest tamil news


இந்நிலையில் அவரது வீட்டிற்கு சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள், மர்மமான பைகளுடன் செல்வதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.இதுகுறித்து மும்பை போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முகேஷ் அம்பானியின் வீட்டின் முகவரி குறித்து, கால் டாக்சி டிரைவரிடம் இரண்டு நபர்கள் தகவல் கேட்டுள்ளனர். அவர்களிடம் மர்மமான பைகள் இருந்துள்ளன. சந்தேகம் ஏற்பட்டதால் போலீசாருக்கு அந்த டிரைவர் தகவல் தெரிவித்தார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பானி வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-நவ-202123:22:29 IST Report Abuse
Natarajan Ramanathan டாக்கிகளில் பயணிக்கும் பயணியர் புகைப்படங்களை தானியங்கியாக பதிவு செய்யும் வசதி இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
08-நவ-202121:12:40 IST Report Abuse
chennai sivakumar அப்போ நிச்சயமாக லண்டன் புது வீட்டுக்கு சென்று விடுவார் அம்பானி.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-நவ-202103:31:22 IST Report Abuse
Sanny அதுக்குதான் கெத்து போட்டாரோ?...
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-நவ-202120:31:21 IST Report Abuse
Sanny அதென்ன அட்ரஸ் தெரியாமலா கெத்து காட்ட வந்தார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X