தமிழ்நாடு

நகராட்சி குத்தகை இனங்களில் அதிக கட்டணம் வசூல்: தி.மு.க.,வினர் மீது சக கட்சியினரே சரமாரி புகார்

Added : நவ 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி மாட்டு சந்தை, காந்தி வார சந்தை, பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தி.மு.க.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி நகர தி.மு. க.,வினர், சப்- கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை, காந்தி வார
 நகராட்சி குத்தகை இனங்களில் அதிக கட்டணம் வசூல்:  தி.மு.க.,வினர் மீது சக கட்சியினரே சரமாரி புகார்



பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி மாட்டு சந்தை, காந்தி வார சந்தை, பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தி.மு.க.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி நகர தி.மு. க.,வினர், சப்- கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை, காந்தி வார சந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்கள் வாயிலாக, குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வந்து கொண்டுள்ளது.
குத்தகைக்கு எடுத்துள்ள ஏலதாரர்கள், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட அதிகமாக வசூலித்து வருகின்றனர். இதற்கு எந்த ரசீதும் வழங்குவதில்லை.பொள்ளாச்சி தினசரி காய்கறி சந்தையிலும் நுழைவுவாயிலில் சுங்கம் வசூலிக்க அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மாறாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ரசீது ஏதும் கொடுக்காமல் கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.காந்தி வார சந்தையிலும் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக கடைகள் அமைக்கப்பட்டு, குத்தகைக்கு எடுப்பவர் ரசீது தராமல் விருப்பம் போன்று கட்டணம் வசூலிக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள இரண்டு கட்டண கழிப்பிடங்களிலும் நிர்ணயித்த கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கின்றனர். இலவச கழிப்பிடமும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.நகராட்சியில் ஏலம் விடப்பட்ட இனங்களில், அரசு நிர்ணயித்துள்ள தொகை குறித்து எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லை. இங்கு விலைப்பட்டியல் வைத்தால் முறைகேடுகளை தடுக்க முடியும்.கேரளா வியாபாரிகள், பொதுமக்கள் அதிகம் வருவதால், மலையாள மொழியிலும் விலைபட்டியல் வைக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரில் தெரிவித்துள்ள குத்தகை இனங்களை, ஆளுங்கட்சியினர் டெண்டர் எடுத்துள்ள நிலையில், தி.மு.க.,வினரே அவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளது, உட்கட்சி கோஷ்டிபூசலை வெளிப்படுத்து கிறது. கட்சியினரின் சட்டவிதிமீறல்களுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்து, 'இமேஜை' உயர்த்துவாரா, என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


கோஷ்டி பூசலால் வெட்டவெளிச்சம்!

பொள்ளாச்சியில், தி.மு.க., வெற்றி பெறாத நிலையிலும், ஆளுங்கட்சியாக இருப்பதால், பல கோஷ்டிகளாக பிரிந்து தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.இரு கோஷ்டியினர், டாஸ்மாக் கடையில் 'கப்பம்' வசூலிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் சமீபத்தில், சமூகவலைதளங்களில் 'ரிலீஸ்' ஆனது.இதையடுத்து, தி.மு.க.,வினரில் ஒரு கோஷ்டியினர், டாஸ்மாக் கடைகள் முன், 'சரக்குக்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் பண்ணுங்க' என்ற அறிவிப்பை வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்நிலையில், மற்றொரு கோஷ்டியினர், தி.மு.க.,வினர், குத்தகை எடுத்துள்ள இனங்களில், விதிமுறைக்கு முரணாக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், சட்டவிதிமீறல்கள் அனைத்தும் வெட்டவெளிச்சமாகி வருகின்றன. பொள்ளாச்சியில் வெற்றி பெறாத நிலையிலேயே இப்படி என்றால், வெற்றி பெற்றிருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்பார்களோ! எல்லாம் முதல்வருக்கே வெளிச்சம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X