தியேட்டர் தீ விபத்து வழக்கு : உரிமையாளர்கள் உள்பட 5 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி :டில்லி உப்ஹார் தியேட்டர் தீப்பற்றி 59 பேர் பலியான வழக்கில், சாட்சிகளை கலைக்க முயன்ற உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேருக்கு, தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.டில்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் 1997ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 59 பேர் பலியாயினர். இதுதொடர்பாக திரையங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சல், அவரது சகோதரர் கோபால் அன்சல் கைதாயினர்.இந்த வழக்கில்
தியேட்டர், தீ விபத்து, வழக்கு,   உரிமையாளர்கள், 7 ஆண்டு சிறை

புதுடில்லி :டில்லி உப்ஹார் தியேட்டர் தீப்பற்றி 59 பேர் பலியான வழக்கில், சாட்சிகளை கலைக்க முயன்ற உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேருக்கு, தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் 1997ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 59 பேர் பலியாயினர். இதுதொடர்பாக திரையங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சல், அவரது சகோதரர் கோபால் அன்சல் கைதாயினர்.இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


latest tamil news




ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனையாக கணக்கிட்ட உச்ச நீதிமன்றம், டில்லியில் அவசர சிகிச்சை அளிக்கும் மையம் கட்டுவதற்கு, இருவரும் தலா 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு அவர்களை விடுவித்தது.இதற்கிடையே, தீ விபத்து வழக்கின் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக, அவர்கள் மீது ஏற்கனவே மற்றொரு வழக்கு பதிவாகி இருந்தது.

அதில், ஆவணங்களை முறைகேடாக கையாண்ட நீதிமன்ற முன்னாள் ஊழியர் தினேஷ் சந்த் சர்மா மற்றும் பி.பி.பத்ரா, அனுாப் சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்கின் விசாரணை டில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் நடந்தது. முடிவில், குற்றம் சாட்டப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேருக்கும், தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.சுஷில் அன்சல், அவரது சகோதரருக்கு தலா 2.25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
09-நவ-202107:56:28 IST Report Abuse
Ramona 59 பேர், இல்லை 1000 பேர் கூட இறந்தாலும் சட்டம் தன் கடமையை நிதானமாக தான் விசாரிக்கும், 23 வருடங்கள் தானே ஆச்சு, ஆனா சினிமாகாரங்க விஷயம் என்றால் புதிய உத்வேகம்,வேகம் பவர்ஃப்ள் பூத கண்ணாடி கொண்டு உடனடியாக விசாரணை செய்து அவர்களுக்கும் அவங்க செய்யும் சிறப்பான சேவைகளுக்கு எந்த கேடும் ஏற்படாத வகையில் துரிதமாக தீர்ப்பு அல்லது பிணை வழங்க தயங்காது, வாழ்க பணக்காரர்கள் வாழ்க வாழ் கவே. சாதாரண மனிதர்களின் பாடு அதோ கதி தான்.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
09-நவ-202107:50:59 IST Report Abuse
Srivilliputtur S Ramesh அருமையான தீர்ப்பு .... குற்றம் நடந்து இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்திருக்கிறது...அருமை... இந்திய நீதிமன்றங்கள் நெடுந்தூக்கத்தில் உள்ளன.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-நவ-202100:28:45 IST Report Abuse
DARMHAR இறைவன் படைப்பில் மிகவும் மெதுவாக ஊர்வது நத்தை.. மிகவும் சுறு சுறுப்பாக இயங்குவது எறும்பு. நீதி மன்றங்களில் நடக்கும் விசாரணைகள் தீர்ப்புகளுக்கு பிறகும் மேல் முறையீடு என்ற முறையில்நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரை வழக்குகள் பல காலம் நீடிப்பது என்பதென்னவோ உண்மை. அதற்குள் ஒரு மாமாங்கம் கூட சென்றுவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X