சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'எதிர்க்கட்சி வேலையை பாருங்க!'

Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'எதிர்க்கட்சி வேலையை பாருங்க!'மதுரையில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின், கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ராஜு, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முல்லை பெரியாறு அணையில், 142 அடி நீரை தேக்க அனுமதி பெற்று தந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆன்மா, தி.மு.க.,வை மன்னிக்காது... அணை திறக்கப்பட்டது பற்றியும், யாரால் திறக்கப்பட்டது என்பது
     பக்க வாத்தியம்


'எதிர்க்கட்சி வேலையை பாருங்க!'



மதுரையில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின், கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ராஜு, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முல்லை பெரியாறு அணையில், 142 அடி நீரை தேக்க அனுமதி பெற்று தந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆன்மா, தி.மு.க.,வை மன்னிக்காது... அணை திறக்கப்பட்டது பற்றியும், யாரால் திறக்கப்பட்டது என்பது குறித்தும், தி.மு.க., அரசு ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை... முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை...' என கேள்வி எழுப்பினார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அட என்னங்க, அ.தி.மு.க.,வினர் இன்னமும், 'ஆன்மா, மன்னிப்பு' என, 'காமெடி' பண்ணிக்கிட்டு இருக்காங்க... எதிர்க்கட்சி வேலையான, அரசுக்கு எதிரான போராட்டங்களை, தி.மு.க., கூட்டணியினர் போல, ஒழுங்கா பார்க்க மாட்டேங்கிறாங்களே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்து ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-202119:09:20 IST Report Abuse
D.Ambujavalli அம்மா காலம் முடிந்து நாலரை வருஷம் ஆண்ட இவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? உரத்த குரல் எழுப்பினால் வ. வரியோ, அமலாக்கமோ, ல. ஒழிப்போ வரும் என்பதால் சும்மா நாலு பேர் உள்ள இடத்தில் பேசிவிட்டுப் போகிறார்கள் போராட்டம் செய்ய அவர்கள் அத்தனை அசடர்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X