சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது தான் தேசத்தில் நிலைமை!

Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இது தான் தேசத்தில் நிலைமை!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து கடத்தியதற்காக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த


இது தான் தேசத்தில் நிலைமை!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து கடத்தியதற்காக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம், ஆர்யன் கானை ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றம், ஜாமீனில் எப்படி விடுதலை செய்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அரபு நாடுகளில், போதை மருந்து வைத்திருந்தாலே, விசாரணையின்றியே துாக்கில் தொங்க விடப்படுவர். ஆனால், நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கடத்தல் போன்ற, 'கிரிமினல்' செயல்கள் மட்டுமல்லாது, குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயலிலும் தாராளமாக
ஈடுபடலாம். ஏனெனில், நம் நாட்டு சட்டங்கள் அவ்வளவு ஓட்டைகள் நிறைந்தவை. 'முன் ஜாமின், வாய்தா, அப்பீல்' என, ஏராளமான வாய்ப்புகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் சுலபமாக வெளியே வந்து விடுகின்றனர். இவை தவிர அரசியல், செல்வாக்கு, பண பலம் ஆகியவையும், கிரிமினல்கள் விடுதலையாக உதவுகின்றன. இதையும் மீறி சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தாலும், அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் பணம் இருந்தால், சிறை என்பது சொகுசு விடுதி தான். கஞ்சா முதல் விரும்பியது எல்லாம் கிடைத்து விடும்.
போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்டு உள்ள ஆர்யன் கான், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிக இயல்பாக இருக்கிறார். அவர் ஏதோ தியாகச் செயல் புரிந்து, சிறை சென்று வருவது போல், ஷாரூக் கான் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி இருக்கின்றனர். இந்த அசிங்கத்தை எல்லாம், இந்தியாவை தவிர வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது! ஆர்யன் கான் உடன் மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும், மும்பை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது. இவர்களின் பின்னால், சர்வதேச கடத்தல்காரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியாது. போதை மருந்து கடத்தல் கும்பலை, இனி சட்டம் நெருங்கவே நெருங்காது. ஆர்யன் கான் விடுதலையோடு, இந்த விஷயம் முடிவுக்கு வந்து விடும்; இதைப் பற்றிய செய்திகள் இனி வெளிவராது. இது தான் நம் தேசத்தின் நிலைமை.
சட்டங்கள் கடுமையாகாத வரை, நீதி துறையில் அரசியல் தலையீட்டை நிறுத்தாத வரை, நம் நாட்டில் குற்றங்கள் பெருகுவதை தடுத்து நிறுத்தவே முடியாது.


உணவேவிஷமாகி விட்டது!எம்.ஞானசேகர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆரணியில், '7 ஸ்டார்' என்ற அசைவ ஓட்டலில் கெட்டு போன இறைச்சி சாப்பிட்ட, லோஷிகா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். இதை தொடர்ந்து காரைக்குடி, கொடைக்கானல், நாமக்கல் என, தமிழகம் முழுதும் உள்ள பல்வேறு ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கெட்டுப் போன இறைச்சி, மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில், இறைச்சியை மொத்தமாக வாங்கி, குளிர்சாதன பெட்டில் பல நாட்கள் வைத்திருந்து, வாடிக்கையாளருக்கு சமைத்துக் கொடுக்கின்றனர்.
கோழி இறைச்சி விற்கும் கடைகளில் கழிக்கப்பட்ட கால், எலும்பு, ஈரல், தலை இவற்றை ஓட்டல்களுக்கு, 1 கிலோ, 50 ரூபாய்க்கு கொடுக்கின்றனர். அதன்மூலம் குழம்பு, சூப், குருமா செய்து விற்கின்றனர். தெருவோர கடைகளில், பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பலகாரம், 'சிக்கன் 65' உள்ளிட்டவை தயார் செய்து, மக்களிடம் விற்கின்றனர். உணவே மருத்து என்ற காலம் போய், இன்று உணவே விஷம் என்ற நிலையை அடைந்து விட்டோம். மக்கள் உயிருடன் விளையாடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய வேண்டும். கடந்த 2008ல், சீன நாட்டுக்கு சென்றேன். பேக்கரி உரிமையாளர் ஒரு பெண். அங்கு சாப்பிட்ட ஒரு சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே, அந்த பேக்கரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அடுத்த சில நாட்களில், சிறுமி இறந்து விட்டாள். ஒரு வாரத்தில் பேக்கரி உரிமையாளர் துாக்கிலிடப்பட்டார். இப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நாட்டு மக்களை காப்பாற்ற இயலும்.


அவர்களை ஏன்விசாரிக்கவில்லை?க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 75 நாட்கள் சிகிச்சை அளித்த 'அப்போலோ' தனியார் மருத்துவமனை நிர்வாகம், 'ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை' எனக் கூறுவது விந்தையாக உள்ளது. காரணம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் அந்த ஆணையம், ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறதாம். மேலும் அந்த ஆணையத்தில், மருத்துவ வல்லுனர்கள் இடம் பெறவில்லையாம்.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவ விபரத்தை கொடுக்கலாமே; அது ஆணையத்திற்கு புரியவில்லை என்றால், மருத்துவமனையின் பிரச்னை இல்லையே! ஜெயலலிதா சாப்பிட்ட இட்லிக்கும், உப்புமாவுக்கும், பல லட்சம் ரூபாய், 'பில்' சமர்ப்பித்த அப்போலோ நிர்வாகம், சிகிச்சை விபரம் மட்டும் தர மறுப்பது, சந்தேகத்தை எழுப்புகிறது. அதே வேளையில், அந்த மருத்துவமனை கூறும் இன்னொரு விஷயம், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி நியாயமானது தானே! ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த நாட்களில், மருத்துவமனையில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை அகற்றச் சொன்ன அன்றைய அ.தி.மு.க., அரசில் இடம்பெற்ற அனைவரையும் விசாரித்திருக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரோடு உள்ளாரா என்பது தெரியாமலே, 'அவர் இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார்...' என்று பொய் சொன்னோரையும், அவருடன் 75 நாட்கள் உடனிருந்த சசிகலாவையும் இன்று வரை விசாரிக்கவில்லை. ஜெயலலிதா மரண விவகாரத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை மட்டும் குறை கூறுவது ஏற்புடையதல்ல.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-202119:30:37 IST Report Abuse
D.Ambujavalli 'கான் ' ஜாமீன் பெற்றது மட்டுமின்றி, கைது செய்த அதிகாரிக்கு ஊழல், லஞ்ச பழிகளை சுமத்தி அசிங்கப்படுத்தி, தான் பரிசுத்தமானவன் என்று ஒரு பிம்பத்தை ரசிகர், பொது மக்களிடையே ஏற்படுத்தும் அவலமும் இந்த நாட்டில்தான் சாத்தியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X