பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

Added : நவ 08, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மூன்று பேர் செல்ல கூடாது. பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசம் அணிய வேண்டும். இரண்டு, நான்கு சக்கர

பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மூன்று பேர் செல்ல கூடாது. பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசம் அணிய வேண்டும். இரண்டு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது மொபைல்போன் பேசக் கூடாது. பாதுகாப்பாக செல்ல, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இன்று முதல் இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில்லாத நகரமாக மாற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிப்பறி போன்ற குற்றசெயல்களை தடுக்க, சந்தேகப்படும்படியான நபர்கள் டூ வீலரில் சென்றாலும், குடியிருப்பு பகுதியில் சென்றாலும் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X